பால மோகனின் ஸ்ரீ விஷ்ணு - ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை (ENGLISH)

 பால மோகனின் ஸ்ரீ விஷ்ணு - ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை (ENGLISH)

மின் புத்தக வடிவம்: பாஸ்கரா

ஸ்ரீ விஷ்ணுவை வணங்கி அடையும் பெரும்பேற்றை விளக்கும் ஸ்லோகங்கள்:---


Slokas explaining the great blessings of worshiping Lord Vishnu:---

உத்தர பாக::

1:
இதீதம்கீர்த்தனீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மந: I
நாம்னம் ஸஹஸ்ரம் திவ்யான -- மசேஷேண ப்ரகீர்த்திதம். II

பொருள்: மகிமை பொருந்தியவரும் போற்றத்தக்கவருமான கேசவ பெருமானுடைய திவ்ய நாமங்கள் ஆயிரமும் ஒன்றுவிடாமல் கூறப்பட்டன.

Meaning: The thousand and one divine names of the glorious and praiseworthy Lord Kesava were chanted.

2: ய இதம் ச்ருணுயாந் நித்யம் யஸ்சாபி பரிகீர்த்தயேத். I
நாஸுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் ஸோஅமுத்ரே ஹ ச மானவ: II

பொருள் : இதனை நாள்தோறும் கேட்பவர்களும், கீர்த்தனம் செய்பவர்களும் இம்மையிலும், மறுமையிலும் யாதொரு தீங்கையோ அல்லது கெடுதலையோ அடையமாட்டார்கள்.

Meaning: Those who listen to this daily and chant it will not suffer any harm or harm in this world or the next.


3:
வேதாந்தாகோ ப்ராஹ்மண : ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயி பவேத். I
வைஸ்யோ தன--ஸம்ருத்த : ஸ்யாச் சூத்ரா : ஸுக -- மவாப்னுயாத். I I

பொருள் : பிராமணர்கள் வேதாந்த ஞானம் பெற்று திகழ்பவர்கள்; சத்திரியர்கள் வெற்றி பெறுவார்கள்; வைசியர்கள் செல்வம் நிரம்பியிருப்பார்கள்; சூத்திரர்கள் சுகம்பெற்று திகழ்வார்கள்.

Meaning: Brahmins are those who attain Vedanta knowledge; The Satriyas will win; Vaishyas will be full of wealth; Shudras will be blessed.

4: தர்மார்த்தீ ப்ராப்னுயாத்-- தர்ம-- மர்த்தார்த்தீ சார்த்த மாப்னுயாத். I
காமா-- னவாப்னுயாத் காளீ ப்ரஜார்த்தீ சாப்னுயாத் ப்ரஜாம். I I

பொருள்: தர்மத்தை விரும்புவோர் தர்மத்தை அடைவார்கள்பொருளை விரும்புபவர்கள் பொருளை அடைவார்கள். போகங்களை விரும்புகிறவர்கள் போகங்களை அடைகின்றார்கள், சந்ததியை விரும்புபவர்கள் சந்ததியை அடைகின்றனர்.

Meaning: Those who love dharma will attain dharma. Those who want material will achieve material. Those who love paths attain paths, those who love posterity attain posterity.


5:
பக்திமான் ய: ஸதோத்ததாய ஸுசிஸ்-- தத்கத-- மானஸ:. I
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய நாம்னா -- மேதத் ப்ரகீர்த்தயேத். I I

பொருள் : எவர் தினந்தோறும் தூங்கியெழுந்ததும் பரிசுத்தமாய் பக்தியுடன் வாசுதேவரிடத்தில் மனதை செலுத்தி அவருடைய இவ்வாயிர நாமங்களை யுகம் நன்றாக கீர்த்தனம் செய்கின்றார்களோ;

Meaning: Whoever wakes up every day and dedicates his mind to Vasudeva with pure devotion and chants his thousand names well for ages;

6: யச: பராப்னேதி விழும் யாதி ப்ராதான்ய-- மேவ ச I
அசாம் ப்ரிய--மாப்னேதி ச்ரேய: ப்ராப்னேத்யனுத்தமம் I I

பொருள் : அவர் பெரும் புகழை பெறுவார். நல்லோர்களிடையே முதன்மையான ஸ்தானத்தை அடைவார்; குறையாத செல்வத்தை அடைவார்மிகுந்த உயர்நலமாகியதெதுவோ அதையும் (மோட்சத்தையும்) அடைவார்கள்.

Meaning : He will get great fame. He will attain the foremost position among the good; He will attain undiminished wealth; They will attain that (Moksha) which is the highest good.


7:
ந பயம் க்வசி-- தாப்னேதி நீர்மம் தேஜஸ்ச விநததி I
பவத்- யோகோ த்யுதிமான் பல- ரூப - குணன்வித: II

பொருள் : அவர் ஓரிடத்திலும் பயத்தை அடையமாட்டார்வீரியத்தையும், உற்சாகத்தையும் பெற்றவர்களாக திகழ்வார்கள்நோயற்றவராகவும், முகப்பொலிவுடையவராகவும் நல்ல பண்புடையவராகவும் வலிமையும், அழகும் பொருந்தியவராய் இருப்பார்.

Meaning: He will never fear anywhere. They will be energetic and enthusiastic. He will be disease-free, fair-faced, good-natured, strong and handsome.

8: ரோகார்த்தோ முச்யதே ரோகாத்- பத்தோ முச்யதே பந்தனாத். I
ப்யான் முச்யதேபீதஸ்து முச்யேதாபன்ன ஆபத:II

பொருள் :நோயால் பீடிக்கப்பட்டவன் நோயின்றி விடுபட்டு சுகமடைவான். தீயகட்டுகளில் அகப்பட்டவர் கட்டுகளிலிருந்து விடுபடுவார். பயந்தவர் பயத்தினின்று விடுபடுவர்ஆபத்தை அடைந்தவர் ஆபத்தினின்றும் விடுபடுவார்.

Meaning: He who is afflicted with disease will be freed from disease and cured. He who is bound by evil bonds will be freed from the bonds. The fearful will be freed from fear. He who has faced danger will be freed from danger.

9: துர்க்காண்-- யதிதரத்-- யாசு புருஷ : புருஷோத்தமம் I
ஸ்துவந் தாமஸஹஸ்ரேண நித்யம் பக்தி -- ஸமன்வித: II

பொருள் : பக்தி சிரத்தையுடன் இவ்வாயிரம் நாமங்களை எவர் தினந்தோறும் புருஷோத்தமனை துதிக்கின்றரோ அத்தகையவர் கடத்தற்கரிய கஷ்டங்களை விரைவில் கடந்து விடுவார்.

Meaning: Whoever chants these thousands of names daily with devotional effort, such a person will soon overcome the difficulties.

10: வாஸு தேவாஸ்ரயோ மர்த்யோ வாசுதேவ -- பராயண:. I
ஸர்வபாப -- விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதனம். II

பொருள்: வாசுதேவரை அடுத்து, வாசுதேவரை சிறந்த புகலிடமாகக் கொண்டவர் எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டு பரிசுத்தமாய் என்றும் நிலைத்ததான பிரம்மத்தை அடைகிறார்கள்.

Meaning: After Vasudeva, those who take Vasudeva as their best refuge are freed from all sins and attain eternally abiding Brahman.

11: ந வாஸுதேவ பக்தானா - மசுபம் வித்யதே க்வசித்

ஜன்ம- ம்ருத்யு - ஜரா - வ்யாதி- பயம் நைவோ பஜாயதே. II


பொருள்வாசுதேவ பக்தர்களுக்கு எவ்விடத்திலும் தீங்கு விளையாதுபிறப்பு, இறப்பு, மூப்பு பணிகளின் பயமும் ஒரு போதும் உண்டாவதில்லை.

Meaning: Devotees of Vasudeva will not be harmed anywhere. There is no fear of birth, death and aging.

12: இமம் ஸ்தவ - மதீயான : ச்ரத்தா- பக்தி - ஸமன்வித: I
யுஜ்யேதாத்ம- ஸுக க்ஷாந்தி - ஸ்ரீ - த்ருதி ஸ்ம்ருதி- கீர்த்திபி:. II


பொருள்சிரத்தையோடும் பக்தியோடும் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்பவன் ஆத்மசுகம், பொறுமை, செல்வம், தைரியம், ஞாபக சக்தி, புகழ் இவற்றுடன் கூடியவனாவான்.

Meaning: One who recites this stotra with diligence and devotion will be blessed with peace of mind, patience, wealth, courage, memory and fame.


13:
ந க்ரோதா ந ச மாத்சர்யம் ந லோபோ நாஸுபா மதி: I
பவந்தி க்ருதபுண்யாணம் பக்தனாம் புருஷோத்தமே. II


பொருள்புருஷோத்தமனை பக்தியுடன் தொழும் புண்ணியவான்களுக்கு கோபம் ஏற்படுவதில்லைபொறாமை உண்டாவதில்லைபேராசை அடைவதில்லை, எந்த கெட்ட எண்ணங்களும் ஏற்படுவதில்லை.

Meaning: Saints who worship Purushottama with devotion do not get angry. Jealousy does not arise. There is no greed, no bad thoughts arise.

14 : த்யௌ: - சந்த்ரார்க்க-- நக்ஷத்ரா கம் திஸோ பூர்- மஹோததி:. I
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன: II

பொருள்சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் இவற்றுடன் கூடிய வானமும், ஆகாசமும், திசைகளும், பூமியும், கடலும், மகாத்மாவாகிய வாசுதேவருடைய வீரியத்தால் தாங்கப்படுகின்றன.

Meaning: The moon, sun, stars along with the sky, sky, directions, earth and sea are supported by the vigor of Vasudeva, the Mahatma.

15: - ஸுரார - கந்தர்வம் ஸ- யக்ஷோரக ராக்ஷஸம். I
ஜகத்வஸே வர்த்ததேகம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் II

பொருள்தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், நாகர்கள் ராட்சதர்கள் இவர்களுடன் கூடியதும் அசைவதும் அசையாததுமான பொருள்களடங்கியதுமான இவ்வுலகம் கிருஷ்ணனுடைய வசத்தில் உள்ளது.

Meaning: Gods, Asuras, Gandharvas, Yatshars, Nagas, Rakshasas along with them and the moving and immovable objects in this world are in the possession of Krishna.

16: இந்த்ரியாணி மனோ புத்தி : ஸத்வம் தேஜோ பலம் த்ருதி:
வாஸுதேவாத்மகான் - யாஹு : க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச II

பொருள்இந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், கூர்மை, பலம், தைரியம், தேகம், ஜீவன் எல்லாம் வாசுதேவரே என அறிகின்றனர்.

Meaning: Senses, mind, intelligence, will, sharpness, strength, courage, wisdom, life are all known as Vasudeva.

17: ஸர்வாகமான - மாசார: ப்ரதமம் பரிகல்பதே. I
ஆசார -- ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு- ரச்யுத: II

பொருள்சாஸ்திரங்கள் அனைத்திற்கும் ஆசாரமே முதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதுஆசாரத்தில் பிறப்பது தர்மம்தர்மத்திற்கு பிரபு அச்சுதர்.

Meaning: Asara is prescribed first for all Shastras. Being born in manners is dharma. Prabhu Achuthar for Dharma.


18:
ருஷ்ய: பிதரோ தேவோ மஹாபூதானி தாதவ: I
ஜங்கமாஜங்கமஞ் சேதம் ஜகந்- நாராயணேத்பவம். II

பொருள்ரிஷிகள், பிதிருக்கள், தேவர்கள், பஞ்ச மஹா பூதங்கள், போகபோக்கியங்கள் ஜங்கம ஸ்தாவரங்கள் ஆகிய இந்த உலகனைத்தும் நாராயணனிடமிருந்தே உண்டானவை.

Meaning: Rishis, Pithirs, Devas, Pancha Maha Bhuthams, Pokabokiyas Jangama Sthavaras all this world originated from Narayana.

19: யோகோ ஜ்ஞானம் கதா ஸாங்க்யம் வித்யா: ஸில்பாதி- கர்ம ச I
வேதா: சாஸ்த்ராணி விஜ்ஞான -- மேதத்-- ஸர்வம் ஜனார்த்தனாத். I I

பொருள்யோகம், ஞானம், ஸாங்கியம், வித்தைகள், சிற்பம் முதலிய தொழில்கள் வேதங்கள், சாஸ்திரங்கள், விஞ்ஞானம் ஆகிய இவையனைத்தும் ஜனார்த்தனிடமிருந்து உண்டானவையே.

Meaning: Yoga, Gnana, Sangyam, tricks, sculpture, etc., Vedas, Shastras, Science, all these are from Janartha.

20: ஏகோ விஷ்ணுர்- மஹத்பூதம் ப்ருதக் ஐபூதான் -- யநேகஸ: I
த்ரீல்லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வபுகவ்யய: II

பொருள்பெரும்பொருளாகி ஒன்றேயாகிய விஷ்ணுவே பல்வேறாக பிரிந்து வெவ்வேறாகி தோன்றிய அனைத்தையும் மூன்று லோகத்திலும் வியாபித்து உயிருக்குயிராய் நின்று அழிவும் மாறுபாடு மில்லாதவராய் அனைத்தையும் ஆளுமை செய்து அனுபவிக்கிறார்.

Meaning: Vishnu, who is the great substance and is one, pervades all the three worlds, and pervades all things that have appeared in various forms and forms, and as a living being, without destruction and variation, personifies and experiences everything.

22: விஸ்வேஸ்வர- ஜம் தேவம் ஜகத: ப்ரபுமவ்யயம்

பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் ஓம் நமோ இதி. II

பொருள்உலகம் அனைத்திற்கும் ஈசுவரரும் பிறப்பற்ற வரும் பிரகாசிக்கப்பவரும் உலகின் தலைவருமான மாறுபாடற்றவருமாகிய தாமரைக்கண்ணனை எவர்கள் வழிபடுகின்றார்களோ அவர்கள் தோல்வியடையமாட்டார்கள்"ஓம் நம" என்று நமஸ்கரித்து எல்லா நன்மைகளும் உண்டாக பரம புருஷனை நமஸ்கரிக்கிறேன்.

Meaning: Those who worship the Lord of all the worlds, the unborn resplendent, the leader of the world, the unchangeable, the lotus, will never fail. Obeisance to the Supreme Lord for all benefits by saluting "Om Nama".

21: இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர் வியாஸேன கீர்த்திதம் I
படேல் இச்சேத் புருஷச்ரேயப்ராப்தும் ஸுகானி ச II

பொருள்எந்த மனிதர் சிரேயஸ்ஸையும் சுகத்தையும் அடைய விரும்புகிறாரோ அவர் வியாசரால் கீர்த்தனம் செய்யப் பெற்ற பகவான் விஷ்ணுவினுடைய இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்க வேண்டும்.

Meaning: Any man who desires to attain cereus and happiness should recite this stotra of Lord Vishnu, which was given to him by Vyasa to chant.

பொருள் கொண்ட 108 ஸ்லோகங்களைப் படிக்க S$10 இல் ஒரு சந்தா செலுத்தவும்.

To read 108 slokas with meaning pay one subscription at S$10.


CLICK HERE TO DONATE FOR WIN SERVICES

Popular posts from this blog

.