ராஜ் ஹேம் அமெச்சூர் ரேடியோ

நூலாசிரியர்: ராஜ்குமார்VU2DRI
மின்புத்தகம்: பாஸ்கர்VU2DBT
முன்னுரை

அன்றாடம் வானொலியை கேட்கும் பொழுது நாமும் ஒருநாள் இந்த வானொலியில் பேச வேண்டும் என்ற அவா நம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்பே! ஆனால் நாமே அதுபோன்ற வானொலி அமைப்பை நமது கட்டுப்பாட்டில் வைத்து பேச முடியுமா என்றுகூட எண்ணி இருப்போம். சரியான முறையான வழிகாட்டுதல் இல்லாமல் தயங்கி தயங்கி சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலையில் விட்டிருப்போம். இதுபோன்று வானொலியின் அலைகள் மூலம் தகவல் பரிமாற்றம் அன்றாடம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த வானொலி ஒலி அலைகள் மூலம் தகவல் பரிமாற்றம் இன்று பல்வேறு விதங்களில் மூலம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகாயவிமானம், கப்பல், செயற்கைக்கோள் போன்றவற்றிலும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சி வானொலி பெட்டி என பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேற்கூறியவற்றை தவிர வானொலி அலைகளை பொழுதுபோக்குக்காகவும் ஒரு சாரார் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை நாம் அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்கள் அல்லது ஹேம்ரேடியோ ஆபரேட்டர்கள் என்று அழைக்கின்றோம. நாணயங்கள் பணத்தாள்கள் அஞ்சல் வில்லைகளில் சேகரிப்பது போல இதுவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாகும். அமெச்சூர் ரேடியோ கலை என்பது பொழுதுபோக்கு கலைகளின் ராணி என்று அழைக்கப்படுகின்றது. ஏனென்றால், பல பல தொழில் நுட்பமும் அறிவு சார்ந்த பெரிய மனிதர்களும் எளிமையாக பங்கேற்பதாகும். பொதுவாக ஒரு செயலை செய்ய ஏற்படுவதற்கு முன் இதனால் என்ன பயன் என்று கேட்பது இயல்பானதாகும். பலப்பல நன்மைகள் கிடைக்கும் இதை பயன்படுத்துவதில். இருந்தாலும் ஒரு சில நன்மைகளை மட்டும் உங்களுக்கு என்று பதிவிடுகின்றேன். முதலாவதாகவும் மிகவும் முக்கியமானதாக பேரிடர் காலங்களில் தகவல் தொழில்நுட்பம் செயல்படாது இருக்கும் அச்சமயத்தில் தற்காலிகமாக நம்பிக்கையான தகவல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி பல உயிர்களையும் உடமைகளையும் காக்கின்றனர். இரண்டாவதாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேனா நண்பர்களைப் போல் சிறந்த நட்புணர்வை பேணுகின்றனர். மூன்றாவதாக மின்சாரம் மின்னணுவியல் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஆய்வுகளை தன்னார்வத்தோடு கற்றுக்கொள்கின்றனர். மற்ற அமெச்சூர் ரேடியோ நண்பர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். இவர்களது குறிக்கோள் 'ஒரே உலகம் ஒரே மொழி' 'ஒன் வேர்ல்டு ஒன் லாங்குவேஜ்' என்பதாகும. அடுத்ததாக இதைப் படிக்க எவ்வளவு செலவாகும் என்று கேள்வி எழும். நியாயமான கேள்வி தான். இதற்கான பயிற்சிகள் வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கின்றது. சில தன்னார்வ ரேடியோ ஆப்ரேட்டர்கள் முன்வந்து கற்றுக் கொடுக்கின்றனர். அல்லது எப்படி கற்பது எனவழிகாட்டுகின்றனர். இதற்கான கற்கும் செலவு மிக மிக சொற்பமே. இதில் இணைவதற்கு அரசு தேர்வு எழுத வேண்டும. வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் வழங்கிஅமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களாக செயல்பட அனுமதிக்கிறது. அமெச்சூர் ரேடியோ ஆப்பரேட்டர் ஆக வேண்டுமானால் அரசு நடத்தும் ஒரு சிறிய தேர்வில் வெற்றி பெற வேண்டும. வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான உரிமத்தை வழங்குகின்றார்கள். அந்த தேர்வின்போது தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டிய சட்ட திட்டங்கள் அவசியம் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டும். அச்சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பதைவிட தமிழில் அனைவருக்கும் புரிந்து செயல்படுதல் பொருட்டே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது..

இவன்,

. இராஜ்குமார்,

திருச்சிராப்பள்ளி.

ராஜ் ஹேம் அமெச்சூர் ரேடியோ மின்புத்தகம்

விலை S$10 மட்டுமே



Popular posts from this blog

பால மோகனின் ஸ்ரீ விஷ்ணு - ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை (ENGLISH)

.